Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஷாலுக்கு மனைவியாகப்போகும் இளம் நடிகை! காதல் பின்னணி உண்மை வெளியானது

விஷால் தற்போது முற்போக்கான விசயங்களை சங்கத்திற்காக செய்து வருகிறது. அண்மையில் எதிர்ப்புகளையும் மீறி பலரின் ஒத்துழைப்போடு இளையராஜாவுக்கு பிரம்மாண்ட விழா நடத்தினார். தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என பிசியாக இருக்கும் இவர் படங்களிலும் நடித்து வருகிறார்.

அவர் அனிஷா என்ற பெண்ணை கல்யாணம் செய்துகொள்ளப்போகிறார் என தகவல் வெளியானது. அனிஷா அர்ஜூன் ரெட்டி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர்.

இந்நிலையில் விஷால் தன் காதல் பின்னணியை கூறியுள்ளார். அனிஷாவை வேலை விசயமாக தான் அவர் சந்தித்தாராம். ஆனால் நாங்கள் திருமணம் செய்துகொள்வோம் என அப்போது நினைக்கவில்லை.

தெரு நாய்களை மையப்படுத்தி ஒரு படம் எடுக்கவுள்ளேன். இப்படத்தின் கதையை அனிஷாவிடம் தான் முதலில் சொல்லிவிட்டு கருத்து கேட்டேன். படம் குறித்த விவாதத்தின் போது தான் நாங்கள் நெருக்கமானோம். காதலில் விழுந்தோம்.

நான் தான் முதலில் காதலை அவளிடம் சொன்னேன். அவள் கடவுளால் எனக்காகவே அனுப்பப்பட்டவள் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.