Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பகவத் கீதை சர்ச்சைக்கு விஜய் சேதுபதி அதிரடி விளக்கம்

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் படங்கள் என்றாலே நம்பி திரையரங்கிற்கு போகலாம் என்ற நிலை உருவாகிவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் செல்போன் ஆபத்து பற்றி பேசியதை யாரோ எடிட் செய்து பகவத் கீதையை தவறாக பேசியுள்ளார் என்று ஒரு செய்தியை பரப்பினர்.

இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது, அதை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதி இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இதில் ‘என் அன்பிற்குரிய மக்களுக்கு பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலை பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்லை, பேசவும் மாட்டேன்.

சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இதுஎந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.