உலக அளவில் நகைச்சுவைக்கு பெயர் போன கதாபாத்திரங்களில் எப்போதும் Mr.Beanக்கும் ஒரு இடம் உண்டு. இந்த Mr.Bean கதாபாத்திரத்தில் நடித்தவர் ரோவன் அடிங்சன்.
சார்லி சாப்ளினுக்கு பிறகு காமெடி ரசிகர்கள் அனைவரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். இப்போது பார்த்தால் கூட அடக்க முடியாத சிரிப்பு வரும் Mr.Bean தொடரில் நடித்தது மட்டுமில்லாமல் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
சில காலமாக அவ்வளவாக சினிமாவில் பார்க்க முடியாத இவர் சமீபத்தில் தனது நகைச்சுவையான ரியாக்ஷனை ரசிகர்களுடன் செல்பி எடுக்கும் போது கொடுத்திருக்கிறார். அதை நீங்களே பாருங்கள்...
நகைச்சுவைலாம் இந்த ஆளுக்குள்ள கலந்து போனது போல... pic.twitter.com/jk4hlrobCw
— வில்லங்கம் (@vicky04197440) February 12, 2019