Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்த பிரபல நடிகர்! அப்போ படம் கண்டிப்பாக தாறுமாறு

வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் முதன்முறையாக நடிக்கவுள்ளார் சிம்பு. சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு மாநாடு என்று தலைப்பு எல்லாம் இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா பணிப்புரிவார் என்று தெரிகிறது.

இந்த நிலையில் மாநாடு படத்தில் சிம்புவுடன் நடிகர் ஜெய்யும் நடிக்கவுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஜெய் ஏற்கனவே சிம்புவின் வாலு, இது நம்ம ஆளு படங்களில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.

இவர்கள் இருவரும் ஒரு முழுநீள கதை முழுவதும் வேட்டை மன்னன் என்ற படத்தில் ஒன்றாக நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் தள்ளிப்போனது மாநாடு படத்தின் மூலம் கைக்கூடியுள்ளது.