Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகர் குறித்து தன்னுடைய மேனேஜர் மூலம் விசாரித்துக் கொண்டிருக்கும் அஜித்- அந்த ஸ்பெஷல் நடிகர் யாரு பாருங்க

அஜித் தமிழ் சினிமாவில் அதிகம் கவனிக்கப்படும் பெரிய நடிகர். அவரை அவ்வளவு சாதாரணமாக வெளியே பார்க்க முடியாது, ஆனால் அப்படி வெளியே ரசிகர்களை சந்திக்கும் போது முகம் சுழிக்காமல் புகைப்படங்கள் எடுத்துவிட்டு செல்வார்.

அப்படிபட்ட அவருடன் நடித்து இப்போது சினிமாவில் பெரிய ரீச்சை பெற்றிருப்பவர் அருண் விஜய். வாரிசு நடிகராக உள்ளே வந்தாலும் அஜித்துடன் அவர் நடித்த என்னை அறிந்தால் படம் தான் அவருக்கு பெரிய ஹிட் என்றே கூறலாம்.

இவருடைய தடம் படம் விரைவில் வெளியாக இருக்கிறது, இப்படத்திற்கான ஒரு பேட்டியில் அருண் விஜய் அஜித் குறித்து பேசும்போது, அவருடன் நேரடியாக நான் பேசவில்லை என்றாலும் அஜித் அவர்கள் என்னை பற்றி அவருடைய மேனேஜரிடம் கேட்டுக் கொள்கிறார்.

எனக்கும், அவருக்கும் இருக்கும் உறவு சந்தோஷமாக இருக்கிறது, அவர் சொன்னது அனைத்தும் நியாபகம் உள்ளது என பேசியுள்ளார்.