Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் பட படப்பிடிப்பில் நேரில் சென்று பிரபல நடிகரை நெகிழ வைத்த அஜித்- சுவாரஸ்ய சம்பவம்

தமிழ் சினிமாவில் உருவாகும் பல படங்களின் பாதி படப்பிடிப்புகள் செட் போட்டு பின்னி மில்லில் நடக்கும். இப்போது கூட விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்பு அங்கு தான் நடக்கிறது.

பின்னி மில்லில் தன் சினிமா பயணத்தில் நடந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வு குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார் போண்டா மணி. அதில் அவர், பின்னி மில்லி விஜய்யின் வேலாயுதம் படத்தில் பிச்சைக்காரன் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தேன், அங்கே அஜித் அவர்களின் படப்பிடிப்பும் நடந்தது.

என்னை பார்த்த அஜித் நேரே வந்து கறிபட்ட உடைகள் அணிந்திருந்தும் என்னை கட்டிப்பிடித்து நலம் விசாரித்தார். பின் திருமணத்திற்கு வர முடியவில்லை என்று வருத்தப்பட்டார். அவரே நான் பிச்சைக்காரன் வேடத்தில் இருந்தபோதும் ஸ்பூன் வைத்து எனக்கு சாப்பாடு ஊட்டு விட்டார், மிகவும் நல்ல மனிதர் என்றார்.