Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார், அதுவும் இப்படியொரு சூழ்நிலையில்! புகழும் பழைய காமெடி நடிகர்

அஜித் சினிமாக்குள் வருவதற்கு முன்பும் வந்த பின்பும் எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்தார் என்பது எல்லாருக்கும் தெரிந்தது தான். இதை பற்றி பழைய காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

அதில், அஜித் மிக சிறந்த உழைப்பாளி. பாசமலர் படத்தில் நான் அவருடன் பணிபுரிந்தேன். அதில் அஜித் ஹீரோ இல்லை, அரவிந்த் சாமி தான் ஹீரோ. பைக்கில் வருவார். ரொம்ப தன்னம்பிக்கையான மனிதர்.

எல்லாத்திலும் தனக்கென்று தனி ஸ்டைலை வைத்திருப்பார். உண்மையாக எல்லாருக்கும் உதவி செய்பவர். தல என்ற பட்டத்தை அடையும் முன்பே அவரின் பண்பு இதுதான். அவருக்கு இப்போது அன்பு தொல்லை அதிகம். அவரது ரசிகர்களை நினைத்தாலே பெருமையாக இருக்கிறது.

எந்தவொரு சினிமா குடும்ப பின்புலமும் இல்லாமல் இப்போது சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார், அஜித் அவர்களுக்கு ஒரு ஹேட்சாஃப் என்றார்.