Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதலிக்கவில்லை, ஆனால் திருமணம் நடப்பது எப்படி? சயிஷாவின் அம்மா பேட்டி

38 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருந்த நடிகர் ஆர்யா இன்று நடிகை சாயிஷாவை திருமணம் செய்வதாக அறிவித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு வெளியான தகவலை இதன் மூலம் அவர் உறுதி செய்துள்ளார்.

கஜினிகாந்த் படத்தில் ஒன்றாக பணியாற்றிய அவர்கள் காதலித்து திருமணம் செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் சாயிஷாவின் அம்மா அளித்துள்ள பேட்டியில் அவர்கள் இருவரும் காதலிக்கவில்லை என கூறியுள்ளார்.

"இது காதல் திருமணம் இல்லை. சயிஷாவை பிடித்துவிட்டதால் ஆர்யாவின் பெற்றோர் எங்களை அனுகினார். எங்களுக்கும் ஆர்யா பிடித்திருந்ததால் ஒப்புக்கொண்டோம். தற்போது திருமண ஏற்பாடு செய்து வருகிறோம்" என அவர் தெரிவித்துள்ளார்.