Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் பாணியில் இறந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு உதவிய சல்மான் கான்

தமிழ்நாட்டை கஜா புயல் தாக்கியபோது நடிகர்கள் பலரும் நிதி உதவி அளித்தனர். விஜய், ரஜினி உள்ளிட்டவர்கள் ரசிகர்கள் மூலம் உதவி செய்த நிலையில், நடிகர் அஜித் நேரடியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 15 லட்சம் ரூபாய்க்கு செக் அனுப்பிவைத்தார். அது பற்றி வெளியில் சொல்லவில்லை.

இந்நிலையில் இது போலவே தற்போது சல்மான் கான் தீவிரவாத தாக்குதலில் இறந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்திற்கு உதவி செய்துள்ளார்.

நாட்டு மக்கள் அனைவரும் நிதி உதவிகளை அனுப்பி வருகின்றனர். நடிகர் சல்மான் கான் ஒரு மிகப்பெரிய தொகைக்கு செக் கொடுத்து அரசிடம் ஒப்படைத்துள்ளார்.

இது பற்றிய தகவலை சல்மான் கான் அறிவிக்கவில்லை என்றாலும், மத்திய அமைச்சர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டுவிட்டார்.