Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திடீரென பயங்கர ஸ்லிமாகிய அஜித்! ரசிகர்கள் கொண்டாடும் லேட்டஸ்ட் போட்டோ இதோ, ஆனால் பாக்கெட்டில்...

விஸ்வாசம் படத்திற்கு அடுத்ததாக தீரன் பட இயக்குனர் எச்.வினோத்தின் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித்.இதன் படப்பிடிப்பு இடையே சிறிது சினிமா பிரபலங்களை சந்தித்தும் வருகிறார். சமீபத்தில் இயக்குனர் பிரியதர்ஷன் போன்றோரை கேரளாவில் சந்தித்திருந்தார். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாக பற்றி வருகிறது.

அதற்கு காரணம், ரசிகர்களுடன் எடுக்கப்பட்ட அந்த போட்டோவில் வெள்ளை சட்டை, காக்கி பேண்ட்டுடன் அஜித் முன்பை விட ஸ்லிமாக காட்சியளிக்கிறார் என்பதுதான். இதனால் ரசிகர்கள் செம்ம குஷியாகியுள்ளனர். இப்படி தான் பிங்க் ரீமேக் முழுவதும் நடிக்கவுள்ளாரா என்று தெரியவில்லை.

மேலும் சமூக வலைத்தள பக்கங்களில் எதிலும் இல்லாத அவர் பட்டன் டைப் செல்போன் தான் உபயோகிப்பதாக இணையத்தில் நெடுங்காலமாக ஒரு பேச்சு உள்ளது. ஆனால் இந்த போட்டோவில் பாக்கெட்டில் ஸ்மார்ட் போன் ஒன்றை வைத்துள்ளார். இதன் விமர்சனங்களை தல ரசிகர்கள், இதுவரை அஜித் ஸ்மார்ட் போன் யூஸ் செய்தது இல்லை என சொன்னதில்லையே என கூறி பதிலடி கொடுத்து வருகின்றனர்.