Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை குறை சொன்ன நீங்கள் ஒழுங்கா? பிரபல அரசியல் தலைவரை திட்டித்தீர்க்கும் தளபதி ரசிகர்கள்!

தமிழ் சினிமா நடிகர்கள் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும் என பிரபல அரசியல் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்விடுத்தார்.

அதை ஏற்று பலவருடங்களாக புகைபிடிக்காமல் இருந்த தளபதி விஜய் சர்கார் படத்தின் கதைக்காக புகைபிடிக்கும் காட்சியில் நடித்தார். இதை வார்த்தை தவறியதாக அன்புமணி குற்றச்சாட்டு கூறியிருந்தார்.

இந்நிலையில் அதிமுக, திமுக கட்சிகளுடன் எந்த சூழ்நிலையிலும் கூட்டணி வைக்கமாட்டோம் என்று மிகவும் பிடிவாதமாக கூறிய அன்புமணி ராமதாஸ் தற்போது 7 சீட்டுக்காக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளார்.

இதை நெட்டிசன்கள் கலாய்த்து எடுத்துவரும் நிலையில் விஜய் ரசிகர்களும் சேர்ந்துகொண்டு திட்டித்தீர்த்து வருகின்றனர்.