Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காசுக்காக இப்படியுமா செய்வது? சர்ச்சையில் சிக்கிய விவேகம் வில்லன், சன்னி லியோன்

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தற்போது பிரச்சாரத்திற்கு தயாராகி வருகின்றன.

டிவி, பேப்பர் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் செய்ய தயாராகி வருகின்றனர். அதிலும் சினிமா துறை பிரபலங்கள் கட்சி பற்றி பேசினால் அதிகம் விளம்பரம் கிடைக்கும் எனவும் அவர்கள் திட்டம் வைத்திருக்கலாம்.

இந்நிலையில் சில நடிகர்கள் காசுக்காக அரசியல் கட்சி பற்றி ட்விட்டரில் பதிவிட ஒப்புக்கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோப்ரா போஸ்ட் என்கிற இணையத்தளம் தான் அதை வெளியிட்டுள்ளது.

அரசியல் கட்சியில் இருந்து அணுகுவது போல பேசி அதை அவர்கள் ரகசியமாக படம் பிடித்து லீக் செய்துள்ளனர். இந்த சர்ச்சையில் வில்லன் நடிகர் சோனு சூத், சன்னி லியோனி உள்ளிட்ட பலர் சிக்கியுள்ளனர்.

அவர்கள் தற்போது இதுபற்றி விளக்கம் தெரிவித்து ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.