Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல 60-யில் அஜித் எடுத்த அதிரடி, ரசிகர்கள் செம்ம சோகம்

தல அஜித் பல இயக்குனர்களுடன் கைக்கோர்க்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆவல். ஆனால், அஜித்தோ தொடர்ந்து ஒரு சில இயக்குனர்களுடனே பயணித்து வருகின்றார்.

இதில் வினோத் தான் தற்போது அஜித்தை இயக்கி வருகின்றார், அட வினோத் சூப்பர் இயக்குனர் என்று நினைத்தால், அவரும் ரீமேக் படத்தை தான் இயக்கி வருகின்றார்.

அது ஒரு புறம் இருந்தாலும் அஜித்திற்கும், வினோத்திற்கும் படப்பிடிப்பில் கொஞ்சம் மோதல் வர, வினோத் இந்த படத்துடன் அஜித்தை விட்டு விலகுகின்றார் என முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், தல 60 படத்தை வினோத் தான் இயக்குவதாக இருந்ததாகவும், தற்போது அவர் விலகியதால் வேறு ஒரு இயக்குனர் இயக்குவார் என அந்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

வினோத் இயக்கத்தில் தல ஒரிஜினல் கதையில் நடிப்பார் என்று நினைத்தால், இப்படி ஆகிவிட்டதே என்று ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.