Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யுடன் என்னை இணைத்து போட்டோ எடிட் செய்தவர் மட்டும் என் கையில் சிக்கினால்...! கதிர் ஓபன்டாக்

நடிகர் விஜய் தற்சமயம் அட்லீயின் இயக்கத்தில் தனது 63வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் பரியேறும் பெருமாள் புகழ் கதிரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடித்து வரும் அனுபவங்களை பற்றி சமீபத்திய பேட்டியில் கதிர் பேசியுள்ளார்.

அதில், தளபதி63 படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது என்னையும் விஜய் சாரையும் இணைத்து நிறைய போட்டோக்களை ரசிகர்கள் எடிட் செய்திருந்தனர். அவற்றையெல்லாம் நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. அதிலும் குறிப்பாக விஜய் சார் என் தோள் மீது கை போட்டிருப்பது போன்று ஒரு போட்டோவை பார்த்தேன். அதை எடிட் செய்த மகராசன் மட்டும் என் கையில் சிக்கினால் நல்லாருக்கும் என்றார்.