Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளியானது சந்தானத்தின் அடுத்த பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட்லுக்! செம்ம மாஸான டைட்டில்

சந்தானத்தின் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் துல்லுக்கு துட்டு-2 படம் வெளியாகியிருந்தது. ரசிகர்களின் பாராட்டு ரீதியிலும் வசூல் ரீதியிலும் இப்படம் வெற்றி பெற்றது என்று தான் கூற வேண்டும்.

மேலும் இவரது நடிப்பில் சர்வ சுந்தரம் உள்ளிட்ட சில படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இந்நிலையில் சந்தானம் புதிய படமொன்றில் கமிட் ஆகியுள்ளார்.

ஜான்சன் என்பவர் இயக்கவுள்ள இப்படத்திற்கு Accused no.1 என தலைப்பும் A1 என்ற அக தலைப்பும் இட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ள இப்படத்தின் மூலம் தாரா அலிஷா என்ற நடிகை தமிழில் அறிமுகமாகவுள்ளார்.

இம்மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி கோடையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.