Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புதுப்பேட்டை படத்திற்கு பிறகு 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேரும் தனுஷ்- ஸ்னேகா! யாருடைய படத்தில் பாருங்க

தனுஷ் தற்சமயம் அசுரன் படத்தில் பயங்கர பிசியாக நடித்து வருகிறார். வடசென்னை படத்தை தொடர்ந்து தனுஷுடன் இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளார் வெற்றிமாறன்.

வேகமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பிற்கு அடுத்ததாக தனுஷுடன் கொடி உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதியதொரு படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக புதுப்பேட்டை படத்திற்கு பிறகு 13 வருடங்கள் கழித்து ஸ்னேகா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது உண்மையாகும் பட்சத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு மீண்டும் புதுப்பேட்டை படத்தை பார்த்த குஷி ஏற்படும்.