Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

துருவ நட்சத்திரம் நான் சின்ன வயதில் நடித்த படம்! மறைமுகமாக கலாய்த்த நடிகர்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படங்களில் துருவ நட்சத்திரம் படமும் ஒன்று. விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.

படத்தின் டிரைலர் எல்லாம் எப்போதோ வெளியான நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தான் சில காரணங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இப்படத்தை பற்றி கூறுகையில், துருவ நட்சத்திரம் நான் சின்ன வயதில் நடித்தது என்று அவருக்கே உரித்தான ஸ்டைலில் கலாய்த்துள்ளார். மிகவும் வருத்தமாக உள்ளது. அற்புதமான இயக்குனர் கௌதம், ஏன் தாமதிக்கிறார் என்பது தெரியவில்லை என்று கூறினார்.