Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகைக்கு ஆபாச மெசேஜ்.. அனுராக் காஷ்யப் பெயரும் சிக்கியது எப்படி?

நயன்தாரா நடித்திருந்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகரான அனுராக் காஷ்யப். இவர் தற்போது ஒரு மலையாள படம் மற்றும் இரண்டு ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அனுராக் காஷ்யப்பின் பெயரை பயன்படுத்தி பிரபல நடிகை ரூஹி சிங் என்பவருக்கு தகாத முறையில் மெசேஜ் வந்துகொண்டிருந்ததாம். திருமணம் செய்துகொள், என்னை காதலி, நிறைய பணம் தருகிறேன் உட்பட பல மோசமான மெஸேஜ்களும் வந்ததாம்.

தினமும் ஒரு வெளிநாட்டு நம்பரில் இருந்து இப்படி தொடர்ந்து மெசேஜ் வந்துகொண்டிருந்தது. பின்னர் தான் தெரிந்தது அது அனுராக் இல்லை அவர் பெயரை யாரோ தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று. அதனால் ருஹி சிங் மும்பை போலீசில் தற்போது புகார் அளித்துள்ளார்.