Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காரை விற்ற நடிகர் அமிதாப் பச்சன்! விலை இத்தனை கோடியா?

நடிகர் அமிதாப் பச்சன் ஒரு கார் ரசிகரும் கூட. அவர் பலவிதமான விலையுயர்ந்த கார்களை வாங்கி வைத்துள்ளார்.

அவர் தற்போது தன்னிடம் இருந்த Rolls-Royce Phantom VI காரை மிகப்பெரிய தொகைக்கு விற்றுவிட்டாராம். அதை ஒரு தொழிலதிபர் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

Rolls-Royce Phantom VI கார் அமிதாப் பச்சனுக்கு கிப்ட்டாக வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2007ல் Eklavya: The Royal Guard படத்தில் பணியாற்றியதற்காக அந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான Vidhu Vinod Chopra அந்த காரை அமிதாப்புக்கு பரிசாக கொடுத்தார்.

அந்த கார் மாடல் தயாரிப்பு 2017ஆம் ஆண்டோடு நிறுத்தப்பட்ட நிலையில் அமிதாப் அதை பல கோடிக்கு விற்றுள்ளார்.