Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் படத்திற்கு அடுத்ததாக சிவா இயக்கவுள்ளது இந்த முன்னணி நடிகரை தானாம்!

நடிகர் கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கியவர் சிவா. இந்த படம் மாபெரும் வெற்றியடைவே இவரது பெயருக்கு முன்னால் அப்படத்தின் தலைப்பே இணைந்துவிட்டது.

அதன்பின் தல அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களை இயக்கினார். இதில் விஸ்வாசம் படம் சமீபத்தில் தான் வெளியாகி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வருகிறது.

இந்நிலையில் கதை தயாரிப்பில் தீவிரமாக இருக்கும் சிவா அடுத்ததாக இயக்கவுள்ளது நடிகர் சூர்யாவை தானாம். இந்த தகவல் ஆரம்பத்திலிருந்தே பேசப்பட்டு வந்தாலும் தற்போது இது உண்மை என்பது போல கோலிவுட் முழுவதுமே இந்த பேச்சாக தான் உள்ளது.

மேலும் சிவா- சூர்யா இணையவுள்ள இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்.