Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாளை வெளியாகவுள்ள படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் நுழைவதாக அறிவித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் நிலையில் கட்சிக்கான முதற்கட்ட பணிகள் மட்டும் தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் ரஜினி நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் வரும் விஷயம் நதிநீர் இணைப்பு. இதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் பூமராங். ஆர்.கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் அதர்வா நடித்துள்ளார்.

இயக்குனர் நேற்று ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். படக்குழுவை ரஜினி பாராட்டியுள்ளார்.