Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித், விஜய், சூர்யாவுக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு! மூவரும் ஒன்று சேர்ந்தால்?

அஜித், விஜய், சூர்யா மூவருமே தமிழ்நாட்டு நன்மதிப்பை மக்களிடம் பெற்றுள்ள நடிகர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களுக்கான ரசிகர்கள், ரசிகைகள் கூட்டமும் அதிகம். அவர்கள் செய்யும் நல்ல விசயங்களை ரோல் மாடலாக கொண்டிருக்கும் ரசிகர்களும், ரசிகைகளும் இருக்கிறார்கள்.

மதுரையை சேர்ந்த ஜான்சி ராணி என்பவர் முறையாக போலியோ சொட்டு மருந்து முகாமை நடத்த கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த பொதுநல மனுவில் அவர் போலியோ சொட்டு மருந்து குறித்து முறையான விழிப்புணர்வு இல்லை என்றும், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள் போலியோ நோய் பாதிப்பு இல்லாத நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால் இந்தியாவில் 1995ல் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முறை தொடங்கப்பட்ட போதிலும், இதுவரை இன்னும் போலியோ நோய் பாதிப்பு இல்லாத நாடாக அறிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டு இருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், மக்களிடம் ஏற்கனவே நன்கு அறிமுகமான நடிகர்கள் மூலம் போலியோ விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுக்கும் போது அது எளிதாக மக்களை சென்றடையும் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் தென்னிந்திய நடிகர் சங்க செயலர், நடிகர்கள் அஜீத், விஜய், சூர்யா ஆகியோரையும் எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டனர். அத்துடன் தொடர்ந்து செய்தித்தாள்கள், ஊடகங்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து தொடர்பான விழிப்புணர்வை பிரபலப்படுத்தலாம் என கருத்து தெரிவித்து இவ்வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.