அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் மெர்சல்.
கடந்த 2017ல் வெளியான இப்படத்தில் 3 கெட்டப்பில் விஜய் நடித்திருந்தார். இதில் சிறுவயது விஜய்யாக அக்ஷத் என்ற சிறுவன் நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
முதலில் இந்த கதாபாத்திரத்துக்கு தேர்வானது ஜுனியர் சூப்பர்ஸ்டார் நிகழ்ச்சியில் பட்டம் வென்ற அஷ்வந்த் தானாம். ஆனால் அந்த சமயம் இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று நடந்து கொண்டிருந்ததால் படத்தில் நடிக்கமுடியவில்லையாம்.
இதை அஷ்வந்தே நம்முடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அஷ்வந்த் தற்போது சூப்பர்டீலக்ஸ், ஐரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இதோ அவர் மேலும் கூறிய தகவல்களை பாருங்க