தமிழ் மொழி, கலாச்சாரங்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் விவேக். காமெடியாக எதையாவது செய்து மக்களை சிரிக்க வைக்காமல் அதில் சிந்திக்கவும் சில விஷயங்களை மக்களுக்கு தெரிவிப்பார்.
இவர் செய்யும் பொதுநல வேலைகளை பார்த்து டுவிட்டரில் விவேக்கை பாலோ செய்வோர்கள் உள்ளார்.
விவேக் அவர்கள் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125 ஆவது ஆண்டு நிறைவு தின விழாவில் கலந்துகொள்ள இலங்கை சென்றுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, இந்த உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும் வரை, தமிழை யாராலும் அழிக்க முடியாது என்று தெரிவித்தார்.