படப்பிடிப்பில் சில்மிஷம் செய்த நடிகர், ஹாக்கி ஸ்டிக்குடன் துரத்திய மாதுரி தீக்ஷித்
படப்பிடிப்பில் தன்னிடம் சில்மிஷம் நடிகரை நடிகை மாதுரி தீக்ஷித் ஹாக்கி ஸ்டிக்குடன் துரத்திய நிகழ்வு தற்போது தெரியவந்துள்ளது. இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று இந்தி நடிகர் அமீர்கானின் பிறந்த நாள். ஆதலால் அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமீருடன் தில் உள்ளிட்ட படங்களில் நடித்த மாதுரி தீக்ஷித்தும் அமீரை வாழ்த்தி ட்விட் செய்துள்ளார்.
அப்போது அந்த தில் படப்பிடிப்பின் போது அமீருடன் நடந்த ஜாலியான அனுபவங்களை கூறியுள்ளார். இதே பிறந்த நாளில் தில் படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டபோது மாதுரியின் கையை நீட்ட சொல்லியுள்ளார் அமீர். அவரும் தனது கையை நீட்ட அதில் எச்சில் துப்பிவிட்டு சென்று பிராங் செய்துள்ளார், அமீர். இதில் கோபமான மாதுரி அவரை ஹாக்கி ஸ்டிக்குடன் துரத்தியுள்ளார்.
I still remember you pulling a prank on me while shooting for #Dil. Remembering those fun moments and many more on your birthday dearest @aamir_khan! Wishing you a fantastic day ahead. Stay blessed!! 😄🙌🏻
— Madhuri Dixit Nene (@MadhuriDixit) March 14, 2019