Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கன்னட நடிகரை போதையில் தாக்கிய விஷயம்! விமல் என்ன கூறுகிறார் பாருங்க

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விமல் கன்னட நடிகரை ஓட்டல் ஒன்றின் வளாகத்தில் தாக்கிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் விமல் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த நிகழ்விற்கு தற்சமயம் விளக்கம் அளித்திருக்கும் விமல், நான் எனது சித்தப்பா தவறியதால் ஊருக்கு சென்றிருந்தேன். எல்லாத்தையும் நான் தான் இழுத்து போட்டு செய்ததால் போனை ஸ்விட்ச் ஆப் செய்தேன்.

உண்மையில் அன்றிரவு எனது சித்தப்பா தவறியதால் நண்பர் ஒருவரை ஓட்டலில் தங்க வைக்க அங்கு சென்ற போது வளாகத்தில் இந்தி பசங்க இருப்பார்கள் என்ற நினைப்பில் ஹே கியா பாய். ஆபீஸ்ல யாரும் இருக்காங்கலானு கேட்டேன்.

அதற்கு அவர் என்ன ஹேய்னு சொல்ற... நான் என்ன உன் சர்வண்ட்டா... என திரும்ப திரும்ப கேட்டு கோபமடைந்தார். உண்மையில் அவர் தான் போதையில் இருந்ததாக அந்த ஓட்டலின் மேனஜர் கூறினார். ஆனால் நான் போதையில் இருந்ததாக பேசப்படுகிறது என்றார்.