Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தற்கொலை செய்து கொள்வேன்: மிரட்டி தான் திருமணம் செய்த்துக்கொண்டாரா திலீப்?

மலையாள நடிகர் திலீப் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தாலும் சமீப காலத்தில் அவர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். மஞ்சு வாரியரை விவாகரத்து செய்தது, காவ்யா மாதவனை இரண்டாவது திருமணம் செய்தது, முன்னணி நடிகை ஒருவரை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது என அவர் சந்தித்த சர்ச்சைகள் ஏராளம்.

தற்போது அவர் பற்றி பிரபல பத்திரிகையாளர் Ratnakumar Pallisseri என்பவர் புதிய சர்ச்சையான குற்றச்சாட்டை திலீப் மீது வைத்துள்ளார்.

காவ்யா மாதவன் முதல் திருமணம் 1999ல் முடிவான போது அவரை திலீப் மிரட்டினார். அப்போது மஞ்சு வாரியரை திருமணம் செய்திருந்த போதும் காவ்யா மாதவனுடன் தொடர்பில் இருந்த திலீப் அவரை மிரட்டினார்.

நீ என்னை விட்டு சென்றால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியுள்ளார். இருந்தபோதும் திருமணம் திட்டமிட்டபடி நடந்தது.

நான் மீண்டும் உனக்காக வருவேன் என்று தான் காவ்யா மாதவன் கூறிவிட்டு சென்றாராம். அது போலவே விவாகரத்து செய்துவிட்டு திலீப்புடன் மீண்டும் தொடர்பில் இருந்து பின்னர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

இது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.