Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெரிய நடிகர்கள் இப்போது பேசவில்லை எனில் அவர்களது வீட்டிலும் ஒருநாள் நடக்கும்- பெண்கள் கொடுமை குறித்து பிரபல நடிகை ஆவேசம்

தமிழ்நாட்டில் இந்த வருடம் அரம்பித்து பெரிய பிரச்சனையாக எதுவும் பேசப்படவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக எல்லோரையும் உலுக்கும் அளவிற்கு ஒரு மோசமான விஷயம் நடந்துள்ளது.

இப்போது அல்ல கடந்த 7 வருடமாக பெண்களுக்கு பொள்ளாச்சியில் கொடுமையே நடந்து வருகிறது. அது இப்போது வெளியே வர அனைவரும் கொதித்தெழுந்து வருகின்றனர்.

ஒரு பேட்டியில் இதுகுறித்து நடிகை வரலட்சுமி பேசும்போது, இவ்வளவு பிரச்சனைகள் நடக்கிறது, பெரிய நடிகர்கள் ஒன்றும் கூறவில்லை. அவர்கள் கேள்வி எழுப்பினால் மக்களுக்கு அது எவ்வளவு நல்லதாக அமையும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எல்லா நடிகர்களும் நல்ல இடத்தில் உள்ளார்கள், அவர்களால் மாற்றம் கொண்டு வர முடியும். எங்கேயோ நடக்கிறது என்று அவர்கள் அமைதியாக இருந்தால் ஒருநாள் அவர்களது வீட்டிலேயே நடக்கும், அப்போது அவர்கள் வருந்துவார்கள் என பேசியுள்ளார்.