Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இது நடக்கும்போது நடிப்பதை நிறுத்திவிடுவேன்: அமீர் கான் கொடுத்த அதிர்ச்சி

பாலிவுட் நடிகர் அமீர் கான் இந்தியா முழுவதும் அதிகம் பிரபலம். அவருக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அமீர் கானின் முந்தைய படம் படுதோல்வி அடைந்த நிலையில் சமீபத்தில் அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்தது. Forest Grump என்கிற ஹாலிவுட் படத்தை தான் Lal Singh Chaddha என்கிற பெயரில் ரீமேக் செய்யவுள்ளார் அவர்.

இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் அமீர் கான் பேசும்போது, "நான் நடிகராக தான் வந்தேன். Taare Zameen Par எதேட்சயாக இயக்கினேன். இப்போதைக்கு நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்துகிறேன். அதனால் படம் இயக்குவதை தள்ளி வைத்துள்ளேன். படம் இயக்க துவங்கினால் நடிப்பதை முழுமையாக நிறுத்திவிடுவேன்" என தெரிவித்துள்ளார்.

இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.