Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு அரசியலுக்கு வருவாரா? எப்போது? - டிஆர் அளித்துள்ள அதிரடி பதில்

சிம்பு செய்யும் சில விஷயங்கள் அவரை பெரிய சர்ச்சைகளில் சிக்கவைத்துவிடுகின்றன. பீப் பாடலுக்கு பிறகு அவர் அண்டாவில் பாலபிஷேகம் கேட்டது பெரிய சர்ச்சையானது. அவர் கூறிய விளக்கத்தை தாண்டி சமூக வலைத்தளங்களில் அவரை வறுத்தெடுத்தனர்.

சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் சினிமா மட்டுமின்றி அரசியல் கட்சியும் நடத்தி வருகிறார். அதனால் சிம்பு அரசியலுக்கு வருவார் என்று பொதுவாக ஒரு பேச்சு உள்ளது.

இது பற்றி ஒரு செய்தியாளர் சந்திப்பில் டிஆர் பேசியுள்ளார். "சிம்புவை அரசியலுக்கு இழுக்க விரும்பவில்லை. அரசியல் வாழ்க்கையானது என்னோடு போகட்டும்" என தெரிவித்துள்ளார் அவர்.