Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் அரசியலுக்கு வருவார்! மறைமுகமாக கூறியுள்ள முன்னணி நடிகர்

நடிகர் அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என சில அரசியல் கட்சிகள் அழைப்பு விடுப்பது வழக்கமாக நடக்கும் ஒன்று. அதற்கு அஜித் எப்போதும் மறுப்பு தான் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இயக்குனர் சுசீந்திரன் அஜித்தை அரசியலுக்கு வாருங்கள் என வெளிப்படையாகவே ட்விட்டரில் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு அஜித் ரசிகர்களே எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

மேலும் தற்போது பிரபல நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி என்கிற நட்ராஜ் ட்விட்டரில் மறைமுகமாக அஜித் பற்றி பேசியுள்ளார்.

"2021 அல்லது 25 அல்டிமேட்" என அவர் கூறியுள்ளார். அஜித்தை அல்டிமேட் ஸ்டார் என அழைக்கும் நிலையில் அவர் 2021 தேர்தலுக்கு அவர் வருவார் என்பதைத்தான் இப்படி அவர் குறிப்பு மூலம் உணர்த்தியுள்ளார் என ரசிகர்கள் பேசிவருகின்றனர்.