Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் சந்தித்தபோது நடந்த சங்கடம், விஜய் 63 படம் என்ன ஆனது- ரோபோ ஷங்கர் மகள் ஓபன் டாக்

பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் வருவது வழக்கமான விஷயம். இப்போது நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா விஜய் 63வது படத்தில் நடிக்க இருக்கிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் 63வது பட வாய்ப்பு குறித்தும், அஜித்தை விஸ்வாசம் படப்பிடிப்பில் சந்தித்தது குறித்தும் பேசியுள்ளார். அதில் விஜய் 63வது படத்தில் நடிக்கிறேன் என்பது மட்டும் தான் உறுதியாகியுள்ளது, என்ன கதை என்பது ஒன்றும் தெரியாது. எனக்கு தேர்வுகள் இருப்பதால் அட்லீ அவர்கள் அதை முதலில் முடிக்க கூறியிருக்கிறார் என்றார்.

அஜித் அவர்கள் அம்மா-அப்பாவை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார் அதை கேட்டுக் கொண்டிருக்கும் போதே என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. அவரை தொடர்ந்து ரோபோ ஷங்கர் மனைவி, அவர் ஷுட்டிங்கில் பிஸியாக இருந்ததால் நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம்.

தல அவர்கள் ஒவ்வொருவரிடமும் மன்னிக்க சொல்லுங்கள், இதோ வந்துவிடுகிறேன் என சொல்லி அனுப்புகிறார், பெரிய நடிகர் காத்திருக்க சொல்லுங்கள் என்று சொல்லாமல் இப்படி அனைவரிடமூம் சொல்லி அனுப்புகிறாரே என எங்களுக்கு சங்கடமாக போனது என்று கூறியிருக்கிறார்.