Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தால் மட்டும் எப்படி இதெல்லாம் முடிகிறது! டெல்லி கணேஷின் பேட்டியை பாருங்கள்

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர்களில் டெல்லி கணேஷும் ஒருவர். நடிப்பது மட்டுமில்லாமல் சில படங்களை தயாரித்தும் உள்ளார்.

அப்படி அவரது மகன் நடிக்க இவர் தயாரித்த படம் மிக பெரிய அளவில் நஷ்டமானது. இதனை ஒரு படப்பிடிப்பு இடைவெளியின் போது அஜித்திடம், மகனை ஹீரோவாக வைத்து படம் எடுத்து ரூ.3 கோடி நஷ்டம் ஏற்பட்டது, படம் நன்றாக இல்லை என்று விமர்சித்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் என் மகனின் படத்தை விநியோகஸ்தர்கள் வாங்க கூட இல்லை என கூறி டெல்லி கணேஷ் வருத்தப்பட்டுள்ளார்.

அதற்கு அஜித், உங்க பையன் நடிக்கிறாரா என்று கேட்டுள்ளார். உடனே அப்படத்தின் டிரைலரை காட்டியுள்ளார் டெல்லி கணேஷ். அவரை நான் பார்க்க முடியுமா என அஜித் கேட்டு, அவரை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்து ஊக்கம் அளித்தாராம்.

மேலும் தனது கார் டிரைவரும் உங்களது ரசிகர் தான் என டெல்லி கணேஷ் கூற அவரையும் அழைத்து போட்டோ எடுத்து கொண்டுள்ளார். இதனால் அந்த டிரைவர் ஒரு மாத சம்பளமே வேண்டாம் என சொன்னதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் டெல்லி கணேஷ் கூறியுள்ளார்.