Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவை கிண்டல் செய்யவில்லை! பிரபல காமெடி நடிகர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களும் ஒருவர் சூர்யா. இவரது நடிப்பில் விரைவில் NGK படம் வெளியாகவுள்ள நிலையில் சூர்யாவை கிண்டலடிப்பது போன்று மலையாளத்தில் மம்முட்டியின் நடிப்பில் உருவாகி வருகின்ற மதுர ராஜா படத்தில் இருந்து போஸ்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

இப்போஸ்டரில் சூர்யாவை கிண்டலடிக்கும் விதமாக சுரு என்ற கதாபாத்திரத்தில் மலையாளத்தின் பிரபல காமெடி நடிகர் அஜூ வர்கீஸ் நடிக்கிறார். சுரு என்பது மலையாள சமூக வலைத்தளங்களில் சூர்யாவை கிண்டலடிக்க ரசிகர்கள் பயன்படுத்தும் சொல்லாகும்.

ஆனால், சூர்யாவின் பெயருக்கும் தனது கதாபாத்திரத்திற்கும் சம்பந்தம் இல்லை, தான் சூர்யாவின் தீவிர ரசிகன் என்று அஜூ வர்கீஸ் தற்போது பதிலளித்துள்ளார்.