Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிப்பு, தயாரிப்பை தாண்டி விஜய் சேதுபதி எடுக்கும் அடுத்த அவதாரம்! இந்த கலையும் தெரிந்தவரா

தற்சமயம் தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகர்களில் விஜய் சேதுபதி முதன்மையானவர். இவரது நடிப்பில் விரைவில் சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத் உள்ளிட்ட படங்கள் வெளிவர உள்ளன.

படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் சில படங்களை தயாரித்தும் உள்ளார். இப்போது இவரது கவனம் இதையெல்லாம் தாண்டி படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுது அளவிற்கு சென்றுவிட்டது.

விஷ்ணு விஷால், விதார்த் இணையும் புதிய படத்திற்கு விஜய் சேதுபதி தான் வசன கர்த்தா. இவரது திரைக்கதை, வசனத்தில் உருவாகவுள்ள இப்படத்தை சஞ்சீவ் என்பவர் இயக்கவுள்ளார். மேலும் விஜய் சேதுபதி தனது ஆரஞ்சு மிட்டாய் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.