Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பல ரசிகர்களை கொண்ட பிரபல காமெடி நடிகர் பரிதாப மரணம்! குடும்பத்தினர் சோகம் - திரையுலகம் கவலை

சினிமாவில் காமெடி மிக முக்கியமான அங்கம். இது எல்லா மொழிக்கும் பொதுவானது தான். இந்திய சினிமாவில் புகழ் பெற்ற காமெடியன்களில் சின்மோய் ராயும் ஒருவர்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இவர் 1960 முதல் பெங்காலி சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர நடித்து வருகிறார். 100 க்கும் அதிகமான படங்களில் நடித்து ரசிகர்கள் கூட்டத்தை தனக்காக வைத்திருக்கிறார்.

அவரின் மனைவி ஜூயி பானர்ஜியும் பெங்காலி சினிமாவில் நடிகைதான். அவர் கடந்த சில வருடங்களுக்கு முன் காலமானார். இந்நிலையில் கோல்கட்டாவில் தன் மகன், மகளுடன் வாழ்ந்து வந்த சின்மோய்க்கு நேற்று முன் தினம் இரவு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர்.

ஆனால் சின்மோய் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டார். இதனால் அவரின் குடும்பத்தினர் சோகத்தில் இருக்கிறார்கள்.