Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் தேவரகொண்டாவால் போலீஸில் சிக்கிய ரசிகர்கள்

தெலுங்கு சினிமாவில் இருக்கும் வழக்கமான விஷயங்களை உடைத்து தனக்கு என்று ஒரு தனி பாணியை உருவாக்கியவர் விஜய் தேவரகொண்டா.

இவர் நடித்துவரும் அடுத்தடுத்த படங்கள் அனைத்தும் படு ஹிட்டாக வசூலிலும் வேட்டை நடத்தி வருகின்றது. இவரை ரசிகர்கள் ரவுடி என்று செல்லமாக அழைப்பர், அதற்கு ஒரு லோகோவும் உள்ளது.

ரசிகர்கள் சிலர் அந்த லோகோவை பைக்கின் நம்பர் பிளேட்டிற்கு பதிலாக அதை வரைந்துள்ளனர். அதனை பார்த்த போலீசார் இந்த இளைஞர்களை கைது செய்து எச்சரித்துள்ளனர்.

இது விஜய் தேவரகொண்டாவிற்கு தெரியவர, வழிமுறைகளை நாம் பின்பற்றுவது மிகவும் நல்லது, நானும் செய்கிறேன், நம்பர் பிளேட் மிகவும் அவசியமானது என பதிவு செய்துள்ளார்.