Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் 166 பட வேலைகளை இன்னும் ஆரம்பிக்காததற்கு இதுதான் காரணமா? வெளியான தகவல்

பேட்ட படத்திற்கு அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸுன் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என்ற தகவல் கடந்த இரண்டு மாதங்களாகவே கூறப்பட்டு வருகின்றன. ஆனால் இன்னமும் இப்படத்திற்கான எந்தவொரு வேலையும் ஆரம்பிக்கப்பட்டதாக தெரியவில்லை.

இந்நிலையில் இந்த தாமதத்திற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் இப்படத்தை வெளிநாட்டு நிறுவனமான லைகா தயாரிக்கவுள்ளது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.

ஆனால் தற்சமயம் நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்டுப்பாடுகள் உள்ளதால் வெளிநாட்டில் இருந்து பண பரிமாற்றம் நடத்த முடியாததினால் தான் தலைவர் 166 பட வேலைகள் இன்னமும் ஆரம்பிக்கபடவில்லை என கூறப்படுகிறது.

இருந்தாலும் அடுத்த மாதம் லோக்கல் நிறுவனங்கள் மூலமாக படத்தின் வேலைகளை ரஜினி ஆரம்பித்து தேர்தல் நேரத்தில் படப்பிடிப்பில் பிசியாக உள்ளாராம்.