Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தேர்தலில் போட்டியிடும் பவர் ஸ்டார் டெபாசிட் வாங்குவாரா? அரசியல் நோக்கம் இதுதானாம்

அனைவருக்கும் தெரிந்த ஒரு காமெடி நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் சீக்கிரமே மக்களிடத்தில் பிரபலமாகிவிட்டார். அவருக்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது.

அண்மையில் அவரின் ரசிகர்கள் பலருக்கும் ஷாக் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் செய்தி தான்.

இந்திய கட்சியின் துணைத்தலைவராக இருக்கும் அவர் தற்போது அரசியல் போட்டியிடுவது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்கு தான். இந்த தொகுதியில் நான் நிற்பது கட்சி தலைமை எடுத்த முடிவு. ஜெயிக்கிறோம், தோற்கிறோம் என்பது பெரிதல்ல, முயற்சிக்கிறோம்.

டெல்லிக்குப் போவேன், அமைச்சர் ஆவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என கூறியுள்ளது.