Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் பாபிசிம்ஹா மீது காவல் நிலையத்தில் புகார்- தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடியால் கோலிவுட்டில் பரபரப்பு

நடிகர் பாபி சிம்ஹா, நடிகைகள் மதுபாலா, ரம்யா நம்பீசனின் நடிப்பில் உருவாகியுள்ள அக்னிதேவி படம் கடந்த வாரம் 22ஆம் தேதி வெளியாகவிருந்தது.

ஆனால் அக்னிதேவ் என்கிற படத்தில் நான் சில நாட்கள் மட்டுமே நடித்தேன். அதன் பிறகு சொன்ன கதைப்படி பத்ம எடுக்காததால் விலகிவிட்டேன். அதை தற்போது அக்னிதேவி என பெயர்மாற்றி நான் நடித்திருப்பது போல கிராபிக்ஸ் செய்து படம் வரும் 22ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர் என பாபி சிம்ஹா புகார் அளித்திருந்தார். இதனால் நீதிமன்றம் படத்திற்கு இடைகால தடை விதித்தது.

இருந்தாலும் படம் அன்று 22ஆம் தேதி வெளியாகிவிட்டது. இதனால் கோபமான பாபி சிம்ஹா அக்னிதேவி படத்தின் தயாரிப்பாளர் ஜான்பால்ராஜ் மீது வழக்கு தொடர்ந்தார். இது குறித்து ஜான்பால்ராஜ், பாபி சிம்ஹா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிக்க, சங்கம் மூலமாக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பாபி சிம்ஹா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்குரிய விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.