Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எந்தவொரு தமிழ் பாடலும் செய்யாத சாதனையை செய்த ரவுடி பேபி!

தமிழ் சினிமா பாடல்களில் தனிப் பெரும் சாதனையைப் படைத்துள்ள பாடல் ரவுடி பேபி. பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர்ராஜா இசையமைப்பில் தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்த மாரி 2 படத்தில் இடம் பெற்ற பாடல் அது.

பாடல் வெளியான நிமிடத்திலிருந்து கடந்த மூன்று மாதங்களாக யூ-டியுபில் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வரும் அந்தப்பாடல், இப்போது 2 மில்லியன், அதாவது 20 லட்சம் லைக்குகளைப் பெற்று மற்றுமொரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இதுவரை எந்த ஒரு தமிழ்ப் படத்தின் பாடலும் 2 மில்லியன் லைக்குகளைத் தொட்டதில்லை. முதல் முறையாக அந்த சாதனையை ரவுடி பேபி பாடல் புரிந்திருக்கிறது. ஏற்கெனவே 350 மில்லியன் (35 கோடி) பார்வைகளைக் கடந்து 400 மில்லியன் (40 கோடி) சாதனையை நோக்கி அந்தப் பாடல் போய்க் கொண்டிருக்கிறது.