Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் இந்தி ரீமேக்கில் விஜய்க்கு பதில் இந்த முன்னணி நடிகரா? போடு செம்ம மாஸ் தகவல்

மெர்சல், தளபதி விஜய்யின் ஒரு மைல்கல் படம் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட இப்படத்தை விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்து அட்லீ இயக்கியிருந்தார்.

இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் கதாநாயகிகளாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று பேர் நடித்திருந்தனர்.

உலகம் முழுவதும் தமிழர்களின் பாராம்பரியத்தையும் மெடிக்கல் உலகில் நடக்கும் அநியாயங்களையும் கூறிய இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக சமீப காலமாகவே கூறப்பட்டு வந்தன.

ஆனால் விஜய்க்கு பதில் யார் நடிக்கவுள்ளது என்ற தகவல் வெளியிடாமல் இருந்த நிலையில் தற்போது பாலிவுட்டின் கிங்கான் ஷாருக்கான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அட்லீயே இந்தியிலும் இப்படத்தை ரீமேக் செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.