Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மறைந்த ஜே.கே.ரித்திஷ் அவர்களின் கடைசி நிமிடம் என்ன ஆனது- தயாரிப்பாளர் விளக்கம்

ஏப்ரல் 13 நேற்று தமிழ் சினிமாவையே ஒரு விஷயம் உலுக்கியது. பிரபல நடிகரும், அரசியல் பிரபலமுமான ஜே.கே. ரித்திஷ் அவர்கள் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

அவரின் இந்த திடீர் உயிரிழப்பு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக உள்ளது. பிரச்சாரம் செய்துகொண்டிருந்த அவர் மதிய உணவு சாப்பிட்ட பிறகு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

அவரின் கடைசி நிமிடங்கள் குறித்து தயாரிப்பாளர் JSK சதீஷ், அவரது வீட்டில் இந்த சோகமான நிகழ்வு நடந்துள்ளது, சாப்பாடு சாப்பிட்டுவிட்டு தண்ணீர் கேட்டுள்ளார். பின் திடீரென்று மயங்கி கீழே விழுந்துள்ளார், உயிர் பிரிந்துள்ளது.

அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார்.