Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் பிரபாஸின் பேச்சால் டென்சன் ஆன விஜய் ரசிகர்கள்

பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலம் ஆனவர் பிரபாஸ். பாகுபலி படத்தை தொடர்ந்த பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் தான் ஜோடியாக நடிக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது அர்ஜுன் ரெட்டி ஹிந்தி ரீமேக் 'கபீர் சிங்' படத்தின் டீசரை பார்த்துள்ளார் பிரபாஸ். அதை புகழ்ந்தும் பேசியுள்ளார்.

அதை பார்த்த மேக்கப் மேன் Aalim Hakim உடனே பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூருக்கு போன் செய்து கொடுத்துள்ளார். அவரிடம் பேசிய பிரபாஸ், "தெலுங்கு அர்ஜுன் ரெட்டி படத்தை விட உங்கள் படம் சிறப்பாக உள்ளது" என கூறி பாராட்டியுள்ளார்.

இந்த தகவலை அறிந்து தற்போது நடிகர் விஜய் தேவரக்கொண்டா ரசிகர்கள் டென்ஷன் ஆகியுள்ளனர்.