Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அம்மாவின் ஆன்மாவாக பேசுகிறேன்! பல விசயங்களை போட்டுடைத்த பிரபல நடிகர் - அவசர அவசரமாக அதிரடி பேட்டி

வரும் நாடாளுமன்ற தேர்தல் 2019 வரும் ஏப்ரல் 18 ல் நடைபெறவுள்ளது. தேர்தல் பரபரப்பு சூழ்ந்திருக்கும் நிலையில் பிரபல நடிகர் ஆனந்த ராஜ் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியுள்ளளார்.

இதில் அவர் தன் நண்பர் ஜே.கே.ரித்திஷ் மரணம் குறித்து வருத்தம் தெரிவித்திருந்தார். பின்னர் பேசிய அவர் நான் பெரிய மனிதன் கிடையாது. என்னிடம் பலம் இல்லை, பணம் இல்லை.

ஆனால் நான் சார்ந்த கட்சியில் இணைந்து நான் கோடிக்கணக்கான பணத்தை இழந்துவிட்டேன். மக்களுக்காக உழைத்தும் எந்த பயனும் இல்லை.

பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிற மோடி, ராகுல் என இருவரிடமும் தமிழ் நாட்டு மக்களின் தேவைகள் குறித்த கேள்விகளுக்கு எந்த பதிலும் இல்லை. மக்களின் பிரச்சனைகளுக்கு எந்த தீர்வும், உத்தரவாதம் இல்லை.

அம்மாவின் ஆன்மாவாக கேட்கிறேன். தயவு செய்து எல்லோரும் நோட்டாவுக்கு வாக்களியுங்கள் என கேட்டுள்ளார்.