Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தேர்தலில் விஜய் ரசிகர்களின் ஆதரவு இந்த அரசியல் கட்சிக்கா! பணம் பெற்ற குற்றச்சாட்டு - அதிரடியான அதிர்ச்சி முடிவு

விஜய் அரசியலுக்கு வருவார் என்பது அவரின் ரசிகர்களின் நம்பிக்கை. ஒரு வேளை வந்துவிடுவாரோ என்பது அரசியல் வாதிகள் மத்தியில் இருக்கும் கலக்கம் எனலாம்.

விஜய் ரசிகர்கள் இப்போது விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ் பல மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறார்கள். அரசியல்கட்சிகள் விஜய்க்கு பிரச்சனைகள் கொடுத்த கதை உங்களுக்கே தெரியும்.

நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க செயலாளர் சபின் பணம் பெற்றுக்கொண்டு அந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் அம்மாவட்ட மக்கள் இயக்க தலைவர் ஜோஸ் பிரபு, சபின் மீது மேலிடம் நடவடிக்கை எடுக்கும். விஜய் படம் ரிலீசாகும் போது கொடுத்த நெருக்கடி மற்றும் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணாத திமுக அதிமுக ஆகிய இந்த இரு கட்சிகளுக்கும் இந்தத் தேர்தலில் ஆதரவு இல்லை. நாங்கள் தனிப்பட்ட முறையில் நோட்டாவுக்கு வாக்கு செலுத்த உள்ளோம் என கூறியுள்ளனர்.