Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் முடிவு! தேர்தல் விசயத்தில் ரசிகர்களுக்கு விஜய் சொன்னது - ஸ்டிரிக்ட் கண்டிசன்

வரும் ஏப்ரல் 18 ல் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு போட்டுக்கொண்டிருக்கின்றன. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.

ஏற்கனவே விஜய் அரசியலுக்கு வருவார் என பலரும் சொல்லி வருகிறார்கள். அவரும் அமைதியாக இருந்து வருகிறார். கடந்த வருடம் கூட சர்கார் பட இசை வெளியீட்டு விழாவின் போது நான் முதலமைச்சராக ஆனால் என பேசியது சர்ச்சையானது.

அதற்கு முன்பே அவரின் தலைவா, மெர்சல், சர்கார் என படங்கள் அரசியல் பிரச்சனைகளை சந்தித்தது. இந்நிலையில் ரசிகர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமையிலிருந்தோ நடிகர் விஜயிடமிருந்தோ குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவளிக்க வலியுறுத்தி எங்களுக்கு எந்த அதிகாரப்பூர்வமான அறிக்கையும் வரவில்லை.

அவரவர்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் என்று தான் தலைமை கூறியுள்ளது. அதேவேளையில் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியைப் பயன்படுத்துவது இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி ஆதரவு தெரிவித்தால் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என கூறியுள்ளது.