Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரூ 10 லட்சத்தை நன்கொடையாக வழங்கிய பிரபல நடிகர்! ராகவா லாரன்ஸின் அடுத்த மாஸ் பிளான்

நடிகர் ராகவா லாரன்ஸ் சினிமா நடிகராக இருந்தாலும் ஆன்மீக ஈடுபாடு அதிகம். ராகவேந்திரர் மீது தீவிர பக்தி கொண்ட அவர் பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். பல குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவி வருகிறார்.

சென்னையில் அறக்கட்டளை நடத்தி வரும் அவர் ஹைதராபாத்திலும் ஒரு கிளை தொடங்கவுள்ளாராம். இதற்காக தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ரூ 10 லட்சத்தை நன்கொடையாக அவருக்கு வழங்கியுள்ளாராம்.

லாரன்ஸ் தெலுங்கு சினிமாவிலும் பணியாற்றி வருகிறார். அவர் நடிப்பில் நாளை காஞ்சனா 3 வரவுள்ளது. இதனையொட்டி நடந்த Pre Release நிகழ்ச்சியில் அல்லு அர்ஜூன் சிரஞ்சீவி சார்பாக அந்த பணத்தை மேடையில் லாரன்ஸிடம் வழங்கியுள்ளார்.