Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் அன்று சொன்னது இன்று நடந்துவிட்டது! நிஜமாக நடந்த உண்மை சம்பவம்

விஜய்யின் படங்களில் அதிரடியான பஞ்ச் வசனங்கள் இருக்கும். சமூகத்தில் நடக்கும் விசயங்களை பிரதிபலிக்கும் விதமாக இருக்கும். அவரின் படங்களில் அரசியல் இல்லாமல் இருக்குமா என்ன?

சர்கார் படத்தின் மூலம் பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டது என்றால் அது 49P தேர்தல் ஓட்டுரிமை பற்றிய சட்டம் தான். விஜய்யின் ஓட்டை வேறு யாரோ ஒருவர் கள்ள ஓட்டாக போட்டுவிடுவார்கள். அதனால் விஜய் தன் ஓட்டு உரிமையை மீட்க போராடுவார்.

சட்டத்தை கையில் எடுப்பார். அது போல தற்போது நெல்லை மாவட்டம் பணகுடி வாக்குச்சாவடி எண் 48ல் மணிகண்டன் என்பவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஓட்டு போட்டதை தொடர்ந்து, மணிகண்டனுக்கு 49P தேர்தல் விதிப்படி மாவட்ட தேர்தல் அலுவலரின் உத்தரவின் பேரில் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.