Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிக்கும் பெண் வேண்டாம்? சிம்பு திருமணம் பற்றி டிஆர் பேச்சு

நடிகர் சிம்பு இதற்குமுன் பல நடிகைகளுடன் காதலில் இருந்துள்ளார். பின்னர் பிரிந்துவிட்டார். தற்போது சிம்பு திருமணம் நடைபெறும் முன்பே அவரது தம்பி குறளரசனுக்கு திருமணம் நடைபெறவுள்ளது.

அதற்காக பிரபலங்கள் பலரையும் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார் டி.ராஜேந்தர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் சிம்புவின் திருமணம் பற்றி கேட்கப்பட்டது.

”சிம்புவிற்கு மணப்பெண் விரைவில் கிடைப்பார் என நம்புகிறேன். சிம்புவிற்கு அவரோடு நடித்த பெண்ணை விட அவருக்கு பிடித்த பெண்ணோடு திருமணம் நடக்கவே ஆசைப்படுகிறேன்!" என டிஆர் கூறியுள்ளார்.